• Sat. Oct 12th, 2024

உலகின் நம்பர் 1 பணக்காரருக்கு சொந்தவீடு இல்லையாம்…

ByA.Tamilselvan

Apr 18, 2022

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் வசிக்க சொந்த வீடு இல்லாமல் நண்பர்கள் வீட்டில் தங்கி கொண்டு இருக்கிறார்.
சொந்த வீடு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்நாள் கனவு. ஆனால் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி என்று உலகின் டாப் நிறுவனங்களை உருவாக்கி வழி நடத்தி வருபவர் எலான் மஸ்க். 21 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து இவரிடம் உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகள் இவர் வசம் உள்ளன.ட்விட்டர் நிறுவனத்தை இவர் வாங்க கூடும் என பேசப்படுகிறது
இந்நிலையில் எலான் மஸ்க்கிடம் செய்தியாளர் ஆண்டர்சன் …..
உலக மக்கள் கடனில் இருக்கிறார்கள் ஆனால் உங்களிடம் சொத்துக்கள் அதிகமாக சேர்ந்துவிட்டதாகவும் கூறுகிறார்களே அதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டார்.
இதற்கு எலான் மஸ்க், என்னிடம் சொந்த வீடு கூட இல்லை. வாடகை வீட்டில்தான் வசிக்கிறேன். டெக்ஸாஸ் தொழிற்சாலை கிளைகளுக்கு செல்லும் போது என் நண்பர்கள் வீட்டில் தங்குவேன். இல்லையென்றால் தொழிலாளர்கள் வீட்டில் உங்களுடன் தங்கி கொள்ளட்டுமா.. இரவு மட்டும் தூங்க வரலாமா என்று கேட்டு தங்கிக்கொள்வேன். மாறி மாறி இப்படி தங்குவேன்.
நான் என்னுடைய சொத்தை எல்லாம் தொழிற்சாலை உருவாக்குவது, வேலைவாய்ப்பு கொடுப்பது போன்ற பணிகளைத்தான் செய்கிறேன். நான் சொந்தமாக கப்பல் வைத்திருக்கவில்லை. சொகுசு கப்பலில் எங்கும் செல்லவில்லை. தனி விமானம் இல்லை. விமானத்தில் செல்வது கூட நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே.
இதன் மூலம் தன்னிடம் சொந்த வீடு இல்லை என்பதை எலான் மஸ்க் உறுதிப்படுத்தி உள்ளார்.
சொந்தவீடு ,கார் உள்ளிட்ட சொகுசு வாழ்க்கை வாழ நினைக்கும் நமக்கு உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்கின் வாழ்கைக்கை புரியாத புதிர்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *