இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அதைத் தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பூசாரி யதி சத்யதேவானந்த சரஸ்வதி கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
130கோடி மக்கள்தொகை கொண்டது இந்திய நாடு.வேலையின்மையும்,வறுமையும் அதிகரித்து வருவதாக பல புள்ளிவிபரங்கள் தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என சாமியார் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் தஸ்னா தேவி கோயிலில் உள்ள முக்கிய சாமியார்களில் ஒருவர் அகில பாரதிய சந்த் பரிஷத்தின் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி. இவர் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
ஹரித்துவாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்து சாமியார்கள் பேசினார்கள் . இதையடுத்து 58 வயதான யதி நரசிங்கானந்த் சரஸ்வதி கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் தான் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், மற்றொரு சாமியார் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ‘தரம் சன்சாத்’ மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இந்தியா இஸ்லாமிய நாடாக மாறுவதைத் தவிர்க்க இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று அகில பாரதிய சந்த் பரிஷத்தின் சாமியார் யதி சத்யதேவானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
பல குழந்தைகளைப் பெற்றெடுத்து முஸ்லிம்கள் தங்கள் மக்கள்தொகையை அதிகரித்து வருகின்றனர். முஸ்லிம் கள் அதிக மானல் இந்தியாவும் இஸ்லாமிய நாடாக மாற்றப்படும்.
நாட்டில் ஒரு குடும்பத்தினர் இரு குழந்தைகளை மட்டுமே பெற்று எடுக்க வேண்டும் என்று எந்தவொரு சட்டமும் இல்லை. எனவே, இந்துக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
2015 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகையில் 79.8 சதவீதம் பேர் இந்துக்கள். 14.2 சதவீதம் பேர் முஸ்லிம்களாவர். உண்மை இப்படி இருக்க இந்தியா இஸ்லாமிய நாடாக மாற வாய்ப்பே இல்லை…