• Wed. Apr 24th, 2024

இந்தியாவின் பொருளாதாரத்தை உலகமே அங்கீகரித்துள்ளது -நிதியமைச்சர்

ByA.Tamilselvan

Feb 1, 2023

2023 – 24ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என உலகமே அங்கீகரித்துள்ளது என கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடப்பதால் இன்றைய பட்ஜெட், தற்போதைய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மக்களவையில் மடிக்கணினி மூலம் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என உலகமே அங்கீகரித்துள்ளது என்று கூறினார். கொரோனா காலத்தில் யாரும் பட்டினியில் இருக்கக் கூடாது என்பதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என அவர் தெரிவித்தார். 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சுவச் பாரத் திட்டத்தின் கீழ் 11.7 கோடி கழிவறைகள் கட்டி சாதனை படைத்துள்ளோம்.என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *