• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை

ByA.Tamilselvan

Jun 8, 2023

லிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிரா-பஹ்யந்தர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் சரஸ்வதி வித்யா (வயது 36). இவர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனது காதலனான மனோஜ் ஷைனி (வயது 56) என்பவருடன் ‘லிவ் இன்’ முறையில் வாழ்ந்து வருகிறார். சரஸ்வதியும், மனோஜும் கடந்த 3 ஆண்டுகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிவ் இன்’ முறையில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் சரஸ்வதியின் சிதைந்த உடல் இன்று கண்டுபிடிக்கப்படுள்ளது. சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சரஸ்வதியை படுகொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டியது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக சரஸ்வதியின் லிவ் இன் காதலனான மனோஜை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சரஸ்வதியை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.