• Tue. Oct 8th, 2024

குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு..

Byகாயத்ரி

Dec 22, 2021

நாடாளுமன்ற இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி தொடங்கியது. இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக நிறைவு பெற்றதாக இரு அவை தலைவர்கள் அறிவித்தனர்.

மக்களவையில் நடப்பு கூட்டத் தொடரில் ஒன்பது மசோதாக்கள் நிறைவேற்றபட்டுள்ளதாகவும் நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று நிறைவு செய்யப்படுவதாக அறிவித்தனர்.பெண்களின் திருமண வயதை 21ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் முன்னதாக கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடரில் லக்கிம்பூர் கேர் வன்முறையில் மத்திய மந்திரி அஜஸ் மிஸ்ராவை பதவி நீக்கக்கோரியும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின. குளிர்கால கூட்டத்தொடரில் 12 மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் தொடர் அமளி நிலவியது.

இதுகுறித்து, சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: இடையூறுகளால் மக்களவையில் 18 மணி நேரம் வீணானது. நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *