• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாற்று திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

சென்னையில் நடைப்பெற்ற மாநில அளவிலான மாற்று திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாவட்ட கலெக்டரிடம் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உதகை சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் உதகை முள்ளிக்கொரை பகுதியில் இயங்கி வரும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்தவர்களும், குன்னூர் அறிஞர் அண்ணா பள்ளியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகினர்.
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த நாகராஜ் 100 மீட்டர் நடைப்பயண போட்டியில் முதலிடமும், குன்னூர் அறிஞர் அண்ணா மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த கிஷோர் கிரிக்கெட் பந்து வீச்சு போட்டியில் முதலிடமும், அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்த பார்வையற்றவரான திலீப்குமார் குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றனர்.


மேலும் குண்டு எறிதல், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நடைப்பயணம் போன்ற போட்டிகளில் குன்னூர் அறிஞர் அண்ணா மாற்றுத்திறனாளிகள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்றனர்.நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்று திறனாளி வீரர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்நிலையில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்கள் மாவட்ட கலெக்டரிடம் எஸ்.பி அம்ரீததை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மலர்விழி, மாவட்ட வளங்கள் அலுவலர் வாசுகி, டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் தலைவர் தஸ்தகீர் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.