• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முப்படை தளபதி குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு வருகை

முப்படை தளபதியாக பொறுப்பேற்றுள்ள அனில் சௌஹான் முதன்முறையாக நீலகிரி மாவட்ட வெலிங்டன் ராணுவ கல்லூரியில் ராணுவ கல்லூரியில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்தும், கல்லூரிகள் செயல்பாடு குறித்தும் தெரிந்து கொள்வதற்காக வருகை புரிந்துள்ளார்…
வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு முப்படை தளபதி அனில் சௌஹான் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ கல்லூரிக்கு வந்தடைந்தனர்.வருகை தந்த முப்படை தளபதி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை காவல்துறை ஏடிஎஸ்பி மற்றும் டிஎஸ்பி குன்னூர் வட்டாச்சியர் ஆகியோர் பூ கொத்து கொடுத்து வரவேற்றனர்.மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி குன்னூர் காட்டேரி பூங்கா அருகேயுள்ள நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உட்பட 12 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இச்சம்பவம் நடந்து ஒராண்டு நெருங்க உள்ள நிலையில் வரும் 8ம் தேதி நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.