• Fri. Dec 13th, 2024

உதகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமான இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வழிபாட்டு உரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் உதகையில் நடைபெற்றது…
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அமைப்புகள் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் உதகை ஏடிசி பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் வழிபாட்டு உரிமை பாதுகாப்புக்கான பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் வழிபாட்டு உரிமைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.