• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

வைகை அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

Byவிஷா

Dec 14, 2024

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒரே நாளில் 6 அடி உயர்ந்துள்ளது.
அணைக்கு வினாடிக்கு 10,347 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை மொத்த நீர்த்தேக்க உயரம் 71 அடி. தற்போது 55.25 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. மேலும் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்ட நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.