

முல்லை பெரியாறு பகுதியில் மழை குறைந்ததால் அதன் நீர்மட்டம் 136 அடியாக குறைந்துள்ளது. இதனால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து 140 அடியை எட்டியது. ஆனால் ரூல்கர்வ் முறையை காரணம் காட்டி கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் வீணாக திறக்கப்பட்டது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 136 அடியாக சரிந்துள்ளது. நேற்று நீர்வரத்து 1126 கன அடியாக இருந்தது. இன்று காலை 366 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
