• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

விஜய்யுடன் ஆட்டம் போட ஆசைப்படும் அதிதி ஷங்கர்

அதிதி சங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் விருமன். விருமன் திரைப்படத்தை கார்த்தி, சூர்யாவும் பயங்கரமாக புரோமோஷன் செய்து படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் திரையரங்கு வந்த ரசிகர்கள் சற்று கலவையான விமர்சனங்களை கொடுத்துச் சென்றனர்.ஆனால் இருப்பினும் விருமன் படக்குழுவினர் படத்தின் பட்ஜெட்டை விட பல கோடி வசூல் பெற்றதாக அறிவித்தனர். இதனை கொண்டாடும் விதமாக சூர்யாவிற்கு டைமண்ட் பரிசும் வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு விருமன் திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.விருமன் படத்தின் மூலம் அறிமுகமான அதிதி ஷங்கருக்கு தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் மற்ற நடிகைகளை போல ஓவராக பந்தா காட்டாமல் எதார்த்தமாக அனைவரைப் பற்றியும் பேசுவது மேடையில் பல பிரபலங்களைப் பற்றி தன் மனதில் தோன்றியது பேசுவது என வெளிப்படையாகவே சில விஷயங்கள் செய்து வருகிறார்.சமீபத்திய பேட்டியில் அதிதி ஷங்கரிடம் விஜய் அவர்களை பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அதிதி சங்கர், விஜய் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என தெரிவித்துள்ளார். மேலும் விஜய் சாருடன் சேர்ந்து நடனம் ஆடுவது தனது ஆசை எனவும் தெரிவித்துள்ளார்.


அதாவது விஜய் அவர்களின் நடனத்தை பார்த்து நான் மிரண்டு போய் உள்ளேன். அதுவும் அவரது நடனத்திற்கு திரையரங்கில் ரசிகர்கள் செய்யும் சேட்டைகளையும் கரகோஷங்கள் பார்த்து வியந்துள்ளேன். அதனால் கண்டிப்பாக விஜய் அவருடன் நான் சேர்ந்து நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.
மேலும் தனக்கு விஜய் அவர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கூடிய விரைவில் கிடைக்கும் என நம்பி இருப்பதாகவும் அதற்காக காத்திருப்பதாக கூறியுள்ளார். விஜய் சார் போன்ற பெரிய நடிகர்களுடன் பணியாற்றும் பொழுது சில விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.