• Tue. Dec 10th, 2024

மேட்டூர் அணையின் நீர்வரத்து 15ஆயிரம் கனஅடியாக சரிவு..!

Byவிஷா

Aug 25, 2022

காவிரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது நேற்று வரை மேட்டூர் அணைக்கு 18ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 15ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒனேக்கல்லுக்கு வருகிறது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு மீண்டும் நீர்வரத்து குறைந்துள்ளது.
இதையடுத்து ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 15 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் போன்ற அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 15 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
மேலும் மேட்டூர் அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியிலும், 600 கன அடி தண்ணீர் கால்வாயிலும் என்று மொத்தம் 15 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு கொண்டு வருகிறது.