

குரங்கம்மை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமான பிறகும் மனித விந்துவில் அது தங்கும் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
குரங்கம்மை தொற்று உலக முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 8 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.இந்நிலையில் குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமான பிறகு விந்துவில் வைரஸ்தங்கியிருக்கும் என ஆய்வில் தகவல்வெளியாகி உள்ளது. இதுகுறித்து பேசிய இத்தாலி ஆராய்ச்சியாளர் பிரான்செஸ்கா, “குரங்கம்மை வைரஸின் டிஎன்ஏ நீண்ட காலம் வாழும் என்பதால் தொற்று பாதிக்கப்பட்ட நபரின் விந்துவில் சில வாரங்கள் உயிர் வாழக்கூடும்” என்றார். ஏற்கனவே உடலுறவால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இந்த தகவல் மேலும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.