மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு பெரியார் நகர், கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சாலையில் பாதாள சாக்கடை கொப்பளித்துக் கொண்டு சாலை முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் அலட்சிய போக்கு உடனே செயல்பட்டு வருகின்றனர். இதனால் அங்கு உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் வயிற்றுப்போக்கு மற்றும் துர்நாற்றம் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றார்.
மேலும் பாதாள சாக்கடை அடைக்கப்பட்டதால் வீட்டில் உள்ள கழிவறைக்கு நீர் எதிர்த்து வருவதால் வீட்டில் உள்ள கழிவறையில் தண்ணீர் ஊற்றினால் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றமும் வீசி வீட்டின் உள் உட்கார முடியவில்லை என குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுத்து பாண்டிச்சேரியில் நடந்தது போன்ற சம்பவம் மதுரையில் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. பாண்டிச்சேரி மாநிலத்தில் கழிவுநீர் வாய்வு தாக்கி உயிர் இழப்பு ஏற்பட்டது போல போன்ற நிலை மதுரைக்கு வருமா அதற்கு முன் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.