• Thu. Mar 28th, 2024

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 119.38 கோடியைக் கடந்தது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 90,27,638 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 119.38 கோடியைக் (1,19,38,44,741) கடந்தது. 1,23,73,056 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  10,264 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,39,67,962 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.33 சதவீதமாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 151  நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,119  பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,09,940 ஆக உள்ளது; நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.32 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 11,50,538 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 63.59 கோடி கொவிட் பரிசோதனைகள் (63,59,24,763) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 62 நாட்களில் 2 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.90 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.79 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 86 நாட்களாக 3 சதவீதத்திற்குக் கீழே 52 நாட்களாக 2 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *