• Thu. Apr 25th, 2024

கொரோனா மூன்றாவது அலை இன்னும் மூன்று வாரத்தில் தீவிரத்தை இழக்கும்

கொரோனா மூன்றாவது அலை இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் தீவிரத்தை இழக்கும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர், என சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:ஐ.சி.எம்.ஆர்., விதிமுறைகளின்படி கர்நாடகாவில் கொரோனா அறிகுறி உள்ளோருக்கு மட்டும் பரிசோதனை நடத்தப்படும். தொற்று உள்ளோர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவர். தொற்று அதிகரித்தால், கடும் விதிமுறைகளை செயல்படுத்துவதை தவிர, வேறு வழியில்லை. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால் மருத்துவமனையில் சேருவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது, ஆறுதலான விஷயம். வல்லுனர்களின் ஆலோசனைப்படி, வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.மக்களின் உயிர் மற்றும் வாழ்க்கை இரண்டும் முக்கியம்.

நம் ஆரோக்கியம், நம் கையில். மக்கள் பொறுப்பு, கடமையை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். முக கவசம் அணிந்து, சமூக விலகலை பின்பற்ற வேண்டும்.மக்கள் தேவையின்றி கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டும். அரங்கங்களின் உட்புறம், வெளி வளாகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது.கொரோனா மூன்றாவது அலை, இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் தீவிரத்தை இழக்கும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *