நம்பர் நடிகையால் பண்ணும் காரியங்களால் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வருகிறாராம் அந்த டைரக்டர். இப்படியே போனால், முதலுக்கே மோசம் வந்து விடும் போல இருக்கே என தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம். பல ஆண்டுகள் போராடி ஒரு படத்தை எடுத்து இப்போது தான் கஷ்டப்பட்டு ரிலீஸ் செய்திருக்கிறார் அந்த டைரக்டர். இந்த படத்தின் ப்ரொமோஷனுக்கு கூப்பிட்டதுக்கே நம்பர் நடிகை வர மறுத்து விட்டாராம்.
உண்மையில் விழாவிற்கு போகா விட்டாலும் மற்ற வழிகளில் படத்திற்கு ப்ரொமோஷன் செய்யும் முயற்சிகளில் தான் இருந்து வந்தாராம் நம்பர் நடிகை. ஆனால் பட ஷுட்டிங்கின் போது நடந்த பார்ட்டியில் சமத்து நடிகையுடன் டைரக்டர் காட்டிய ஓவர் நெருக்கத்தால் செம கடுப்பாகி தான் அத்தனையையும் நிறுத்தி விட்டாராம் நம்பர் நடிகை. இது பற்றி டைரக்டரிடமே சண்டை போட்டு, பிரேக் அப் வரை போன நம்பர் நடிகை, படத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் ஒதுங்கி விட்டாராம். இந்த படத்திற்கு தான் இப்படி என்றால், அடுத்த படத்திற்கும் பெரிய ஆப்பாக வைத்து விட்டாராம் நம்பர் நடிகை. இதனால் மொத்த வாழ்க்கையும் போய் விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறாராம் டைரக்டர்.
முதல் முறையாக பெரிய நடிகரை வைத்து படம் இயக்கும் சான்ஸ் கிடைத்ததால், நம்பர் நடிகையின் ராசி என கொண்டாடி பூரித்து போயிருந்தாராம் டைரக்டர். ஆனால் டைரக்டர் இயக்க போகும் பெரிய நடிகரின் படத்திலும் நம்பர் நடிகையை நடிக்க வைக்க தயாரிப்பு தரப்பு நினைத்துள்ளது. இதற்காக நம்பர் நடிகையிடம் பேசிய போது, தனக்கு 10 கோடியும், டைரக்டருக்கு 10 கோடியும் சம்பளம் வேண்டும் என கறாராக கேட்டுள்ளாராம். அதோடு, நம்பர் நடிகை சமீப நாட்களாக ஸ்லிம்மாகிறேன் என்ற பெயரில் டோக்கு விழுந்த கிழவி ரேஞ்சுக்கு போய் விட்டதால் மார்க்கெட்டில் தற்போது அவரை பெரிதாக யாரும் தேடுவதில்லையாம்.
இந்த விவகாரம் பெரிய நடிகரின் காதுக்கு போக, செம டென்ஷன் ஆகி விட்டாராம். இதனால் டைரக்டர் இப்போது வெளியிட்டிருக்கும் படம் ஓடினால் தான், தனது படத்தை இயக்குவது பற்றி மேற்கொண்டு பேசப்படும். இல்லாவிட்டால் டைரக்டரை மாற்றுவது பற்றி சிந்திக்கலாம் என தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி விட்டாராம்.