இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இந்த திரைப்படம் பூவே உனக்காக படத்தைப் போல காதல் கதையை மையமாக வைத்து படம் உருவாகும் என முன்னதாகவே தகவல்கள் பரவி வந்தது. இதில் கூடுதல் தகவலாக, வழக்கமாக விஜய் நடிக்கும் படங்களில் சண்டைகாட்சிகள், பாடல்கள்,வசனங்கள் என பல இருக்கும். ஆனால் இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் கிடையாதாம். நண்பன் பட பாணியில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நண்பன் படத்தில் சண்டை காட்சிகள் இருக்காது. ஆனால் படம் செம ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.