• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கோவில் யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது- முதலமைச்சர்

ByA.Tamilselvan

Dec 4, 2022

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் கோவில் மக்களுக்காகத்தான், யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 31 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். தாலியுடன் 30 சீர்வரிசைப் பொருட்களையும் முதலமைச்சர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:மக்கள் பணியே மகேசன் பணி என செயலாற்றி வருகிறோம். கோவில் என்பது மக்களுக்காகத்தான், கோவில் யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது. அரசியல் செய்ய எதுவும் கிடைக்காததால் சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். ஆதாரம் எதுவும் இன்றி குற்றச்சாட்டுக்களை சிலர் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில இதுவரை இல்லாத அளவிற்கு கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைவருக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.