• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஆர்.பாரதி கட்சியிலிருந்து நீக்கம்?முதல்வர் அதிரடி

ByA.Tamilselvan

Dec 4, 2022

தனது கட்சியை விமர்சித்து பேசிய திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ் .பாரதிக்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் அதிரடி பேச்சு
சென்னை ஆர்எஸ் புரத்தில் நடந்த நிகழ்ச்சியின் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்எஸ் பாரதி பேசினார். அப்போது அவர், எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்எல்ஏ, எம்பி ஆகிவிட்டனர். ஒரே கொடி, ஒரே கட்சி என இருந்ததால் பதவி கிடைக்கவில்லை. உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்காத நிலையில் உழைக்காதவர்கள் பதவியில் அமர்ந்துள்ளனர். கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எளிதாக பதவி கிடைக்காது; அதை ஜீரணித்துக் கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும்” என பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகபேசிய முதல்வர் “பதவி வரும் போகும்..கழகமே நம் அடையாளம் உழைப்பவர்களுக்கு கட்சியில் உரிய வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். இது மறை முகமாக உழைக்கவில்லை என்றால் பதவி கிடையாது என்ற எச்சரிக்கையாகும். இதனால் விரைவில் ஆர்.எஸ் பாரதி கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது.