மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மும்பையில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

பின்னர் கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழாவை முடித்துக் கொண்டு மீண்டும் மும்பை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தோனியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் வெற்றிமாறன் தோனியை நேரில் சந்தித்து டி-ஷர்டில் அவரது ஆட்டோகிராபை பெற்றுக் கொண்டார். இது குறித்து சிறுவன் வெற்றிமாறன் கூறுகையில்:

எனக்கு சிறுவயதில் இருந்தே தோனியை பிடிக்கும் அவரை பார்ப்பதற்காக இன்று விமான நிலையம் வந்திருந்தேன். அவரைப் பார்த்து ஹாய் என்று சொன்னேன் பதிலுக்கு வரும் எனக்கு ஹாய் சொன்னார். அதன் பிறகு எனக்கு டி-ஷர்டில் அவரது ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். இந்த டிஷர்டை துவைக்காமல் பிரேம் செய்து மாட்டிக் கொள்வேன்.
நானும் சிறு வயதில் இருந்து கிரிக்கெட் பிடிக்கும் உள்ள தான் தற்போது கிரிக்கெட் பயிற்சியில் இருந்து வருகிறேன் என கூறினான்.







; ?>)
; ?>)
; ?>)