வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையம் கடந்த 2019 ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை தாயில் வெட்டி வட்டார பொது மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது.

மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட பின்பு கட்டிடங்கள் மட்டும் புதிதாக கட்டப்பட்டுள்ளது. தற்போது வரை கூடுதலாக மருத்துவர் கிலோ செவிலியர்களோ பணியாளர்களோ நியமனம் செய்யப்படவில்லை. தினசரி 300-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெரும் இந்த மருத்துவமனையில் தற்போது ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார்.

எனவே இந்த மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் நியமனம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. சின்ன கருப்பசாமி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய செயலாளர் கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் பெரிய சக்கரை, ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் பேசினார். மருத்துவ அதிகாரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.


