மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ளது. பூக்கடை பகுதி, இந்த பூக்கடை பகுதியில் பாம்பு ஒன்று இருந்து கொண்டு அச்சுறுத்தி வருவதாக பூக்கடை உரிமையாளர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜீவா தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் பூக்கடைக்குள் பதுங்கி இருந்த சுமார் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் என்ற விஷப்பாம்பு சதூர்யமாக மீட்டனர்.
தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, வனத்துறையினர் உதவியுடன் மீட்கப்பட்ட விஷப்பாம்பை வனப்பகுதியில் விடுவித்தனர்.,

எப்போதும் பரபரப்பாக காணப்படும் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகிலேயே விஷப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.