• Wed. Jul 16th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

தமிழர்களுக்கு நீதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

ByKalamegam Viswanathan

Jul 6, 2025

யாழ்ப்பாணம் – செம்மணி புதைகுழியில் சித்திரவதை செய்து கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களுக்கு ஐ.நா.மனித உரிமை ஆணையம் நீதி வழங்கக் கோரியும், செம்மணி படுகொலைக்கு பன்னாட்டு விசாரணை நடத்திட இந்திய – தமிழ் நாடு அரசுகள் குரல் கொடுக்க வலியுறுத்தியும் நேற்று ( 05.07.2025) காரி(சனி)க்கிழமை காலை 11.00 மணிக்கு மதுரை – மேலூர் பென்னிகுவிக் பேருந்து நிலையம் அருகில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் – தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அ.தங்கம் அடைக்கன் ( தலைமைக் குழு உறுப்பினர், தமிழர் மக்கள் இயக்கம்): தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் தோழர்கள் ரெ.இராசு ( தமிழ்த் தேசியப் பேரியக்கம்), சி.ஜீவா (தலைமைக்குழு உறுப்பினர், தமிழர் மக்கள் இயக்கம் ), அருணா ( தலைவர், மகளிர் ஆயம்), இராம.கோட்டைக் குமார் ( மாநில ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி), செ.கர்ணன் ( தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு), சி.சூர்யா ( தலைமைக் குழு உறுப்பினர், தமிழர் மக்கள் இயக்கம்), விசு கரிகாலன் ( தமிழ்த் தேசியப் பேரியக்கம்) இராவணக் குமார் ( தமிழ்த் தேசிய உணர்வாளர்) , மணிக் குமார் ( இளைஞர் பாசறை, நாம் தமிழர் கட்சி) ஆகியோர் உரையாற்றினர்.

தோழர் கதிர் நிலவன் ( மதுரை மாநகர் செயலாளர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்) நிறைவுரையாற்றினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சாமிக்கண்ணு ( கொட்டாம் பட்டி தொகுதி , நா.த.க.), சிவக்குமார் ( வடக்கு மாவட்டச் செயலாளர், நா.த.க.) உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்க நிகழ்வாக செம்மணி புதைகுழிக்கு நீதி கேட்கும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலூர் பேருந்து நிலையப் பயணிகளும், பொதுமக்களும் கண்டன உரைகளை மிக ஆர்வமாக கேட்டுச் சென்றனர்.