• Sat. Mar 22nd, 2025

காவிரி ஆற்றில் தண்ணீர் வீணாக வெளியேறும் அதிர்ச்சி

ByAnandakumar

Feb 28, 2025

காவிரி ஆற்றில் உள்ள கிணற்றில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள காவிரி ஆற்றில் நஞ்சை புகலூர் ஊராட்சிக்கு தண்ணீர் எடுக்கும் கிணறு ஆற்றின் நடுவே அமைந்துள்ளது.

கிணற்றில் உள்ள குழாய் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

மேலும் கிணற்றின் மேல் மூடி அதிக அளவில் சேதமாக இருப்பதாலும், இரும்பு பைப் சேதமடைந்து இருப்பதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோடைகாலம் துவங்க உள்ள நிலையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்திலும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறி வரும் நிலையில், காவிரி ஆற்றில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.