பாட்டாளி மக்கள் கட்சி ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் போதும் தமிழகம் முன்னேறி விடும் என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்
அப்போது பேசிய அன்புமணி, “ வன்னியர் சங்க காலத்தில் சேலம் மாவட்டத்தில் கிராமம் கிராமமாக சென்று டாக்டர் ராமதாஸ் எழுச்சியை ஏற்படுத்தினார்.
இப்போது அதே அளவிற்கு மீண்டும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாமக வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சியமைக்கும். நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக இல்லை. 35 வயதில் மத்திய அமைச்சராகி எல்லாவற்றையும் பார்த்து விட்டேன்.
பாட்டாளி மக்கள் கட்சி ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் போதும்; 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தால் மட்டும் போதும். தமிழகம் முன்னேற்றம் அடைந்து விடும். இது, பாமக 2.0. கட்சிக்கு மறுசீரமைப்பு நடைபெற்று வருகிறது. 2026 நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம்.
சிலருக்கு பதவிகள் கிடைத்தது. சிலருக்கு கிடைக்கவில்லை. டாக்டர் ராமதாஸுக்காக மட்டுமே கட்சியினர் உள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை பெற்று பணியாற்ற வேண்டும். நமக்குள் எந்த சர்ச்சையும் வரக்கூடாது. நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் நம்மை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.
தமிழ்நாட்டை முன்னேற்ற அன்புமணி சொன்ன ரகசியம்..!
