• Fri. Mar 24th, 2023

மக்களை தேடி மருத்துவம் திட்டம்… 75 ஆயிரம் பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் விநியோகம்..

Byகாயத்ரி

Jun 22, 2022

தமிழகத்தில் இதுவரை 25 பேருக்கு மருத்துவப் பெட்டகம் வினியோகிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “தமிழ்நாட்டில் தொலை தூர மலை கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. யோகா பயிற்சி செய்வதன் மூலமாக கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் அனைவரும் உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது. மாரத்தான் போட்டியில் நாட்டின் 36 மாநிலங்களில் 21 கி.மீ. தூரம் ஓடிய ஒரே நபர் என்ற சாதனையை விரைவில் எட்டுவேன். தமிழகத்தில் மக்கள் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் இதுவரை 75 ஆயிரம் பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் வினியோகிக்கப் பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *