நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மாயார் ஆற்றில் 2 ஆண் யானைகள் ஆக்ரோசமாக சண்டையிட்ட காட்சி வெளியாகி உள்ளது…
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. வனத்திலிருந்து வெளியேறும் காட்டுயானைகள் அவ்வப்போது சாலைகளிலும் உலா வருகின்றன.
குறிப்பாக தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் குடிக்க கூட்டமாக யானைகள் வருவதை அதிக அளவில் காண முடிகிறது. இதனிடையே தென்னிந்தியாவில் உள்ள யானைகளை ஒரே நேரத்தில் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி உள்ள நிலையில் மசினகுடி மாயார் ஆற்றில் 2 ஆண் யானைகள் ஆக்ரோசமாக சண்டையிட்டுள்ளன.
2 யானைகளும் ஒன்றோடு ஒன்று முட்டி தள்ளி தண்ணீருக்குள்ளேயே சண்டையிட்ட வீடியோவை வனத்துறை செயலளர் சுப்ரியா சாஹூ தனது Twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது சமூக வலை தலங்களில் வேகமாக பரவி வருகிறது.