ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கி தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டத்தை கொண்டு வந்தன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு திபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு ந டத்த தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.