• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருச்சுழி அருகே உடையான பட்டியில் பசுமை கிராம திட்டத்தில் குறுங்காடு வளர்ப்பு பணிகள் வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட்டார்

ByG.Ranjan

Jun 16, 2024

திருச்சுழி அருகே உடையான பட்டியில் பசுமை கிராம திட்டத்தில் குறுங்காடு வளர்ப்பு பணிகள் வருவாய் கோட்டாட்சியர் பார்வையிட்டார். திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில் குருங்காடு திட்டத்தை ஆர்.டி.ஓ பார்வையிட்டார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் உடையாம்பட்டி ஊராட்சி நிர்வாகம் மற்றும் மற்றும் கிரீன் பவுண்டேஷன் சார்பில் பசுமை கிராம திட்டத்தில் இல்லங்கள்தோறும் மரக்கன்று வழங்குதல், சாலை ஓர மரம் வளர்ப்பு , ஊரணி மற்றும் கண்மாய் கரைகளில் மரம் வளர்ப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. தமிழக அரசின் பசுமை கிராம திட்டத்தில் மூலம் உடையனாம்பட்டி அரசு பள்ளி வளாகத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதுவரை 600 க்கு மேற்பட்ட மரங்கள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது. 100 நாள் வேலை திட்டப் பணியாளர் களின் முழு ஒத்துழைப்புடன் மரம் வளர்ப்பு பணி நடை பெற்று வருகிறது. இந்த பணிகளை அருப்புக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக்கண்ணு நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் பேசும்போது.மாவட்ட ஊராட்சி நிர்வாகம் சார்பாக அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை வளர்ப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கூடுதலாக மரங்களை வளர்க்க வேண்டும்உடையாம்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர் உடைய முழு ஒத்துழைப்போடு நடைபெறும் குறுங்காடு திட்டத்தை பார்வையிட்டேன்.இதே போன்று அனைத்து ஊராட்சிகளிலும் குறுங்காடு திட்டத்தை மேம்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொண்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமுருகன் கிரீன் பவுண்டேஷன் நிர்வாகி பொன்ராம் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் அதிகாரி மற்றும் 100 நாள் வேலை பணித்திட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.