• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

என் பெயரின் காரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ரஷ்யாவில் கம்யுனிஸ்ட் போராளி ஸ்டாலின் இறந்த நேரம் நான் பிறந்ததால் எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார் என பூச்சி முருகன் அவர்கள் இல்ல திருமண விழாவில் முதல்வர் பேச்சு.

முதல்வர் மு.க.ஸ்டாலின், பூச்சி முருகன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், உங்களுக்கு பிறக்கிற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். கலைஞர் கருணாநிதியை பொறுத்தவரையில், எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் தமிழ் பெயரை தான் சூட்டியுள்ளார். என்னுடைய பெயர் மட்டும் தான் வித்தியாசமாக இருக்கும். அதுவும் எனக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் காரணப்பெயர்.

கலைஞர் கருணாநிதி அவர்கள் கம்யுனிசத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். எனவே, ரஷ்யாவில் ஸ்டாலின் அவர்கள் இறந்த நேரம் நான் பிறந்ததால் எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார். எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டுவதற்கு முன்னதாக, அய்யாதுரை என்று தான் பெயர் சூட்ட திட்டமிட்டிருந்தனர் என்றார்!