• Sat. Apr 20th, 2024

அரசியல் சச்சின் டெண்டுல்கர் ஐ.பி

எப்போவும் பரபரப்பா இயங்குற பத்திரிகை அலுவலகத்தில் தேர்தல் முடிஞ்சு கொஞ்சம் நிதானத்துக்கு வந்த நேரம் .அப்போ திமுக வெற்றி பெற்றது குறித்து பேச்சு ஓடிக் கொண்டிருந்தது .திமுக எங்களோட அனுகூலத்துல 170 ஜெயிக்கும் நினைச்சோம். ஆனால் 159 தான் வந்துச்சு எங்க எங்க கோட்ட விட்டுச்சுனு பேச்சு எழுந்தது.அப்போ அண்ணே ஒருத்தர் சொன்னாரு காட்பாடில துரை முருகன் எப்படி கடைசி ரவுண்டுல ஜெயிச்சாரு ,அதே போல ஆத்தூர்ல ஐ.பி எப்படி இவ்ளோ ஓட்டு வித்தியாசத்துல ஜெயிச்சாரு னு சந்தேகமா இருக்குனு ஒரு டாபிக் ஓடிட்டு இருந்துச்சு.

அப்போது இந்த விஷயம் இப்படி இருக்குமோனு எல்லாருக்கும் ஒன்னு ஓடிட்டு இருக்கு. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஐ.பெரியசாமி அதிக ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெற்றுள்ளார்.திமுகவில் இது ஒரு முக்கியமான வெற்றியா தான் இருக்கும்,இது ஒரு விதத்துல திமுகவிற்கு மேலும் அசுர பலமாக இருக்கும்.இன்னும் குறிப்பாக சொல்லணும்னா இந்தியா டீம்ல சச்சின் எப்படி நின்னு வெறித்தனமா ரன் அடிப்பாரு பாருங்க அது மாதிரி.கிட்டத்தட்ட சொல்லனுமா ஐ.பெரியசாமியை சச்சின் டெண்டுல்கர் கூட ஒப்பிட்டாலும் அது மிகையாகாது.

சரி ஆயிரம் ரெண்டாயிரம் இல்லை ஒரு லட்சம் ஒட்டு வித்தியாசத்துல வெற்றி பெற்றுருக்காரு அதுவும் பெரிய ஆள் கிட்ட இல்லை, பாமக வேட்பாளர் கிட்ட.பாமக தோற்கும்னு தெரிஞ்சு தான் இங்க ஆளுங்கள போடுறாங்க இதுவும் ஒருவிதமான கட்சிகளுக்கு இடையே இருக்கிற புரிதல் தான்.ஆத்தூர் தொகுதி வேட்பாளரை ஆதரிச்சு அவங்க கட்சி தலைவர் ,மருத்துவர் அய்யாவும் சரி ,சின்ன அய்யாவும் சரி கட்சி வேட்பாளர் அறிவித்ததோடு சரி, நம்ம கட்சி வேட்பாளர் என்பதை மறந்து கடைசி வரைக்கும் ஓட்டு கேட்டு வரல.

சரி இதெல்லாம் கூட விட்டுருங்க இவர் தான் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கூட அதுவும் இல்லாம இப்போ அமைச்சர் வேற அப்படி இருக்கும் போது திண்டுக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தூர் ,திண்டுக்கல் ,பழனி ,நத்தம் ,ஒட்டன்சத்திரம் ,நிலக்கோட்டை (தனி) அப்படி 6 தொகுதியும் அவர் கண்ட்ரோல் இருந்துருக்கணும்.அங்க போட்டியிட்ட அத்தனை பேரையும் ஜெயிக்க வச்சுருக்கணும். ஆனால் அவரும் அவருடைய மகன் இருவர் மட்டும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள்.

இங்க அவங்க ஜெயிச்சது பிரச்சனை இல்லை.ஆனால் கூட்டணி கட்சி காரங்க ஐ.பி இருக்காருன்னு தான் நம்பி நிற்க வைத்திருப்பார்கள்.அப்படி இருந்து திண்டுக்கல் முன்னாள் அமைச்சர் சீனிவாசனை ஜெயிச்சாரு ,நத்தம் தொகுதியில் அதிமுகவால் ஒதுக்கப்பட்ட நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். இவங்களா ஜெயிச்சாங்கனு சொல்றத விட திமுகவ சேர்ந்த ஐ.பி தான் மறைமுகமாக ஜெயிக்கிறதுக்கு ஆதரவா இருந்துருக்காரோனு கட்சி வட்டாரத்தில் பேசுறாங்க.

இப்போ கூட பாருங்களே இங்க கூட சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வெளையாடுற பார்த்த தெரியும் ஒரு மேட்ச்ல இறங்கிட்டா 100 அடிக்கிற வரைக்கும் தன்னோட ரன் அதிகரிச்சுட்டு போவாப்புல ஆனால் 100 அடிச்சுட்டாரு.அதுக்கப்புறம் டீம் பத்தி கவலை படமாட்டாரு ,தேவை இல்லாம தூக்கி அடிக்கிறேன்னு பேருல அவுட் ஆகிடுவாரு நமக்கு தேவை 100 அடிச்சாச்னு டீம் பத்தி கண்டுக்கமாட்டாரு போயிட்டே இருப்பாரு.

ரஜினி ஒரு படத்துல சொல்ற வசனம் தான் நியாபகம் வருது நீ போ னு சொல்றவன் முதலாளி ,வா நாம போவோம்னு சொல்றன் பாரு அவன் தான் தலைவன்.

அவரு தலைவனா இல்ல.. . . . .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *