மதுரை வந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் சி.டி.ரவி மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி அரை ஆடைக்கு மாறிய காதிகிராப்ட் அலுவலகத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுரை தமிழ்நாட்டினுடைய கலாச்சார தலைநகர் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரியமான நகர் அன்னை மீனாட்சி நகருக்கு வந்தது பெருமையாக கருதுகிறேன். காந்தியடிகள் தன்னுடைய இரண்டாவது வருகையின்போது 1921 செப்டம்பர் 21ல் ஆடை மாற்றம் என்ற வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்த இடம் இந்த இடம். இந்த இடத்திற்கு ஆடை மாற்றம் நூற்றாண்டு விழா நடைபெறுகின்ற போது வந்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
நேற்று பஞ்சாபில் நடந்தது மிகவும் கண்டனத்துக்குரியது. தேசிய பாதுகாப்பில் அலட்சியப் படுத்தப் பட்டிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் இது நடந்திருக்கிறது. நம்முடைய தேசத்தின் பிரதமர் அவர்கள் 20 நிமிடங்கள் காத்திருக்கிறார்.
தேசிய பாதுகாப்பிற்கு பிரதமருடைய பாதுகாப்பிற்கு அந்த மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வரும்போது பிரதமருடைய பயண நிகழ்ச்சி நிரல் அதனுடைய பயணப் பாதையை வழிவகுப்பது மாநில அரசுதான் அந்த வகையில் பஞ்சாபிலுள்ள மாநில அரசு தான் இதற்கு பொறுப்பு. இந்த நிகழ்வில் காங்கிரஸின் உள்ளார்ந்த எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது பிரதமருக்கு பிரதமருடைய நிற்கும் அவருடைய உயிர் பாதுகாப்பிற்கும் நீண்ட ஆயுளுக்கும் மிருதுஞ்சய ஹோமங்கள் செய்து வருகிறோம் உள்ளூர் அளவிலும் பல பிரார்த்தனைகள் செய்து கொண்டிருகின்றனர் என கூறினார்.