



ஆரல்வாய்மொழி அருகேயுள்ள காற்றாடி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவின் 10ம் நாள் தேர்பவனி நடைபெற்றது.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியின் சமஸ்தானத்தில் நிதி நிர்வாகம் தலைமை பொறுப்பில் இருந்தவர் நீலகண்டன். நிதி துறை தலைமை பொறுப்பாளரான நீலகண்டன். இறை இயேசுவின் மீது கொண்ட பக்தியால் கிறிஸ்தவ மதத்தை தழுவ விரும்பியவர் ஆரல்வாய்மொழியை அடுத்துள்ள வடக்கன் குளத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபை ஆலயத்தின் பங்கு தந்தையிடம் ஞானஸ்நானம் பெற்று முழுமையாக கிறிஸ்தவ மதத்தில் அவரை இணைத்துக் கொண்டார்.


நீலகண்டன் என்ற இயற்பெயரை மாற்றி ஞானஸ்தானத்தின் போது தேவசகாயம் என அவரது பெயரை மாற்றிக்கொண்டார். திருவிதாங்கூர் மன்னர் தேவசகாயம் மீது பல்வேறு தண்டனைக்கு ஆட்படுத்தினார், அப்போதும் தேவசகாயம் இறை இயேசுவின் மீது, புனித வியாகுல அன்னையின் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் படை வீரர்களால், ஆரல்வாய்மொழி காற்றாடி மலைக்கு சங்கிலிகளால் பிணைத்து இழுத்து வந்து சுட்டு கொன்றனர்.

குமரி மற்றும் கேரள மாநிலத்தில் தேவசகாயம் மீது பக்தி கொண்ட மக்கள் அவரை சுட்டுக் கொன்ற இடத்தில் வந்து பிரார்த்தனை செய்து அவர்களது கேட்கும் மன்றாண்டுகள் கை கூடியது. குமரி மற்றும் கேரள மக்களின் மத்தியில் ஒரு வேண்டுதல் இன்று வரை வழக்கத்தில் இருக்கிறது.
ஆடு,மாடு காணாது போனால் கை மறந்து வைத்த பொருட்கள் காணாது போனால். பாதிக்கப்பட்ட மக்கள் தேவசகாயத்திற்கு வெற்றிலை, பாக்கு வாங்கி வைக்கிறேன் காணாது போன பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நேர்ச்சை இன்றும் மக்கள் மத்தியில் இருக்கிறது.

இந்தியாவில் பொதுநிலையினர் ஒருவருக்கு மறை சாட்சி புனிதர் என்ற ரோமாபுரியின் உயர்ந்த அங்கிகாரம் தேவசகாயத்திற்கு மட்டுமே வழங்கப்பட்ட உயர் மரியாதை.
இன்று (மார்ச்16)ம் நாள் புனித வியாகுல அன்னை, மறைசாட்சி புனித தேவசகாயம் இரட்டை திருத்தல திருவிழாவின் 10ம் நாள் மாலை தேவசகாயம், புனித வியாகுல அன்னை என இரண்டு தேர்களின் பவனி நடைபெற்றது. பக்தர்கள் தேரில் உப்பு நல்ல மிளகு, எலுமிச்சம் மற்றும் மலர் மாலைகளை நன்றி காணிக்கையாக செலுத்தினார்கள்.


