



அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட திமுக ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய அணிகலன்கள் அமைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம் கொட்டாரத்தில் உள்ள ஒன்றிய திமுக தலைமை அலுவலகத்தில் வைத்து ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் சதீஷ்.தகவல் நுட்ப அணியின் செயல்பாடுகள் பற்றி பேசினார்.


வாக்குச்சாவடி முகவர்கள் 10_பேர்களில், ஒவ்வொரு வரும் தனித் தனியாக 10_பேரை சந்திக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களை எடுத்து செல்லவேண்டும் 10,100,1000_ம் என்று நாம் சந்திக்கும் பொது மக்களின் எண்ணிக்கையை .
திமுகவிற்கு ஆதரவாக அணிதிரட்ட வேண்டும். இப்படி நாம் கண் துஞ்சாது ஒவ்வொரு வரும் உழைத்தால் 200 தொகுதிகளுக்கு மேல் நாம் வெல்வோம் என அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தெரிவித்தார்.
நிகழ்வில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்,பூவியூர் காமராஜ்,பிரேமலதா, தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் நாகராஜன்,ஆஸ்டீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

