• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் போஸ்டர் வெளியானது

ByA.Tamilselvan

Oct 3, 2022

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
முதல்பாகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 2ம் பாகத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முதல்பாகத்தில் அருண்மொழி வர்மன் இலங்கையிலிருந்து சோழ தேசத்தை நோக்கி வரும் போது அழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்து விட்டதாக முடியும். ஆனால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார். நாகையிலுள்ள புத்த விஹாரத்தில் ரகசியமாக சிகிச்சை பெற்ற அரண்மனைக்கு செல்வது தான் 2ம் பாகத்தின் தொடக்கம்.தற்போது அந்த போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.