அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் படக்குழுவினர் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்கள். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஃபஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இசையமைக்கும் பணிகளும் தேவிஸ்ரீ பிரசாத் தீவீரமாக பணியாற்றி வருகிறார். புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் பாடல்கள் அனைத்தும் டாப் ஹிட். குறிப்பாக “ஓ சொல்றியா மாமா ” பாடல் சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது என்றே கூறலாம். இந்த பாடல் ஹிட்டானத்துக்கு மற்றோரு காரணம் என்னவென்றால், சமந்தா ஆடிய கவர்ச்சி நடனம் என்றும் கூறலாம்., புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்து பாடல் இருக்கிறதாம். அந்த பாடலில் பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா கவர்ச்சி நடனம் ஆடவுள்ளாரம். மலைக்கா வயதானாலும் என்றும் அழகாக இருப்பதால் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறையவேயில்லை. இதனால் புஷ்பா-2 குத்து பாடலில் இவரை எதிர்பார்க்கலாம். ரசிகர்கள் ரெடியா..??