• Wed. Jul 9th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செயல்படுகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

May 6, 2022

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகசெயல்படுகிறது, அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய THE LURKING HYDRA என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஆளுநர், “இந்தப் புத்தகம் ஒரு முக்கியமான ஆவணம். இது தீவிரவாத்திற்கு எதிரான வாதத்தை முன்வைக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதில் இந்திய ராணுவம் அதிக திறன் வாய்ந்ததாக உள்ளது.
பல்வேறு நாடுகள் இந்தியா மீது போரை நிகழ்த்தி உள்ளனர். 1990-ம் ஆண்டு நான் ராணுவத்தில் ஒரு பிரிவில் சேர்ந்தபோது, தீவிரவாதத்தை எதிர்ப்பது என்பது தினசரி வழக்கமான ஒன்றாக இருந்தது.பிரதமர் மோடி 2014-ல் பதவியேற்ற பின்பு, ராணுவத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. தீவிரவாதத்தை எதிர்த்து சண்டையிடுவதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை.
அரசியல் லாபத்திற்காக வன்முறையைத் தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள். அதுமட்டுமின்றி நம் நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது, ராணுவம் அதனை மிகவும் திறமையாக பாதுகாத்தது. அதற்கு மிகப் பெரிய நன்றிகள். புல்வாமா தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை நம்முடைய ராணுவத்தினர் திருப்பி வழங்கினர்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் மோசமான இயக்கம். இவர்கள் பல முகமூடிகளை அணிந்துகொண்டு நம் நாட்டில் இயங்கி வருகின்றனர். பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.