தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான இங்கு, எப்போதுமே பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.
இந்த நிலையில் கோவில் நிருவாகப் பணிகள் சிறப்பாக இல்லை என்று பல்வேறு புகார்கள் பக்தர்களிடம் இருந்து வருகின்றன.

அந்தவகையில், வெள்ளி, சனி, ஞாயிறு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பிறகு கடந்த திங்கட் கிழமை திருக்கோவில் திறந்த நாள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக திருக்கோவிலில் எந்த ஒரு அடிப்படை நடவடிக்கைகளும் செய்யப்படவில்லை.
கடற்கரையில் நீராடும்போது பெண் ஒருவருக்கு காலில் அடிபட்டு ஒரு மணி நேரம் ஆனபிறகு தான் தனியாருக்கு சொந்தமான மருத்துவ ஊர்தி ஒன்று வந்தது.
மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து 24 மணி நேரமும் கோவிலின் அருகே அரசு மருத்துவ ஊர்தி நிற்கவும், கோவிலின் உள் பிரகாரத்தில் சுற்றி உள்ள முக்கிய பகுதிகளில் முதலுதவி பொருட்கள் அடங்கிய பெட்டிகளை வைக்கும் வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.