• Fri. Apr 26th, 2024

புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு, நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்!..

Byகுமார்

Oct 6, 2021

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிக கூட்டம் கூடாத வகையில் தமிழகத்தில் அனைத்து கோவில்களிளும் நடைசாத்த தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. அதன் எதிரொலியாக கோவில்களில் பூஜைகள் மற்றும் தர்ப்பணம் கொடுக்க தடை உள்ளது.

இன்று புரட்டாசி அமாவாசை தினம்.
புரட்டாசி மாத அமாவாசை அன்று தர்பணம் செய்வது என்பது 14 ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்ததற்கான பலனை கொடுக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்தவகையில் இன்று புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து பித்துரு தோஷ நிவர்த்தி செய்து கொண்டனர்.

மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை உள்ளதால் பொதுமக்கள் அழகர்கோவில் அருகேயுள்ள கள்ளந்திரி பெரிய வாய்க்காலில் தர்ப்பணம் கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *