• Wed. Mar 22nd, 2023

சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை- பக்தர்கள் ஏமாற்றம்!..

Byகிஷோர்

Oct 6, 2021

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலானது தரை மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பௌர்ணமி 4 நாட்கள், ஒரு மாதத்திற்கு மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் கொரோனா காரணமாக வாரம் வெள்ளி ,சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருந்த போதிலும் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இன்று மஹாளய அமாவாசைக்கு பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தடை விதிக்கப்பட்டதால் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *