• Sat. Apr 20th, 2024

எல்லாரும் வெளியே போங்க விமானம் மோத வருது.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபரப்பு!

ByA.Tamilselvan

Apr 21, 2022

விமானம் ஒன்று மோத போவதாக வந்த தகவலால் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள்ளே இருந்த எம்பிக்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்கள்.
20 ஆண்டுகளுக்கு முன் உலகையே அதிரச்சியில் ஆழ்த்தியது அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல். 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அல்கொய்தா மூலம் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களில் விமானங்களை விட்டு மோதி தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேருக்கு மேல் பலியானார்கள். அன்று மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த தீவிரவாத தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்ல உலகநாடுகளையே உலுக்கியது.
. இந்த நிலையில்தான் நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் விமானம் ஒன்று மோத போவதாக வந்த தகவலால் அதன் உள்ளே இருந்த எம்பிக்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்கள்.
நேற்று நாடாளுமன்றத்தை சுற்றி சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் வழக்கமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு விமானம் ஒன்று பாதை மாறி வருவதாக போலீசாருக்கு கண்காணிப்பு மையத்தில் இருந்து புகார் வந்துள்ளது. ரேடாரில் விமானம் வருவது தெரிந்துள்ளது
விமானம் நாடாளுமன்றத்தை நோக்கி வருகிறது என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது அரசு கட்டிடங்களில் அல்லது பெரிய கட்டிடங்களில் மீண்டும் விமானம் மூலம் தாக்குதல் நடத்துகிறார்களா என்று அஞ்சி போலீசார் துரிதமாக செயல்பட்டனர். நாடாளுமன்றத்திற்கு உள்ளே சென்று அங்கிருந்த எம்பிக்ளை வேக வேகமாக வெளியேற்றினர்.
இந்த பதற்றத்திற்கு பிரகு அங்கு விமானம் எதுவும் வரவில்லை, அருகில் நடக்கும் பேஸ்பால் ஆட்டம் ஒன்றிற்காக அங்கு இறக்கப்பட்ட பாராஷூட்தான் ரேடாரில் தவறாக தெரிந்துள்ளது மற்றபடி வேறு விமானம் எதுவும் வரவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. இருந்தாலும் பாதுகாப்பு கருதி நாடாளுமன்றத்திற்குள் எம்பிக்கள் யாரும் சில நிமிடங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *