
இலங்கையை போன்ற பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள து.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடன் சுமை ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானின் ரூபாய், ஒரு டாலருக்கு 185 ரூபாய் என்ற அளவில் சரிந்துள்ளது.
சர்வதேச நிதியத்தில் கடன் வாங்க பாகிஸ்தான் முயன்றது. ஆனால் பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் வைத்துள்ளது. இதனால் உலக நாடுகளின் நிதியுதவி கிடைக்காமல் பாகிஸ்தான் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சில நிபந்தனைகளுடன் கடன் வழங்க முன் வந்தன. பாகிஸ்தானிலும் அந்நியச் செலாவணி கையிருப்பு கடுமையாக குறைந்துள்ளது. இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நெருக்கடி இப்போது பாகிஸ்தானிலும் காணப்படுகிறது.
பாகிஸ்தானின் நாள்தோறும் 18 மணிநேரம் வரையிலும் கூட மின்வெட்டு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மின் துறையை தவறாக நிர்வகித்ததாக ,ஷெபாஸ் ஷெரீப்குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு இது முதல் பெரிய சவாலாகும்.