• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

விக்னேஷ்சிவன் வெளியிட்ட புகைப்படம் வைரல்

ByA.Tamilselvan

Oct 17, 2022

தனது மகன் தன் மேல் யூரின் போனதை ஆனந்தத்துடன் கூறி புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ்சிவன்.
பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஜூன்
மாதம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.திருமணமான 4 மாதத்தில் நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிவிட்டார். இது குறித்த அறிவிப்பை அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் அறிவித்தார்.


இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி தங்களது இரட்டை குழந்தைகள் புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டனர்.
.வாடகைதாய் மூலம் குழந்தை பொற்றுக்கொண்ட விவகாரம் தற்போது பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது மகன் தன்மேல் யூரின் போனதை ஆனந்தத்துடன் கூறி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.தந்தையாக மகிழ்ச்சியுடன் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.