எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை அறிவிக்க வலியுறுத்தி இபிஎஸ் சட்டமன்றத்தை புறக்கணித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடந்து முடிந்தது.தற்போது தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று சபாநாயகர் அப்பாவுவின் இரங்கல் குறிப்போடு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இபிஎஸ் சட்டமன்றத்தை புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டபேரவை எதிர்கட்சிதுணைத்தலைவர் ஓபிஎஸ் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனேஜ்பாண்டியன் ஆகியோரது இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. இது சபாநாயகர் முடிவு என்றாலும், இபிஎஸ்க்கு திமுக அரசு வைத்த மிகப்பெரிய செக் என்று தான் பார்க்கப்படுகிறது. இந்த நுட்பமான அரசியலை புரிந்து கொண்ட இபிஎஸ் எதிர்க்கட்சி துணைத்தலைவராக உதயகுமாரை அறிவிக்க வலியுறுத்தி சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்திருப்பதாக அறிவித்துள்ளார்.
இபிஎஸ் புறக்கணிப்பு….. சட்டமன்றத்தில் பரபரப்பு
