பேட்டரி கோளாறு காரணமாக ஸ்மார்ட்போன் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் நடுவானில் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இண்டிகோ விமானத்தில் டிபுர்காவில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த விமானத்தில் தான் இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியது. ஸ்மார்ட்போனில் திடீரென தீப்பிடித்த நிலையில், விமான ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இண்டிகோ விமானம் 6E 2037 டிபுர்காவில் இருந்து டெல்லி திரும்பி கொண்டிருந்தது. நடுவானில் பயணி ஒருவரின் போனில் இருந்து புகை வெளியேறி தீப்பிடிக்க தொடங்கியதை விமான ஊழியர் ஒருவர் கவனித்தார். இதனால் தீ அதிகமாகும் முன்னரே விமான ஊழியர்கள் தீயணைப்பான் கொண்டு தீயை அணைத்தனர். அதன்பின் சுமார் 12.45 மணி அளவில் டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
“போனின் பேட்டரியில் அதிகளவு வெப்பம் அடைந்ததால் தான் தீப்பிடித்து எரிந்தது என இண்டிகோ தெரிவித்தது. டிபுர்காவில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த இண்டிகோ 6E 2037 விமானத்தில் ஸ்மார்ட்போன் ஒன்றின் பேட்டரி அளவுக்கு அதிகமாக வெப்பமடைந்தது. அனைத்து விதமான அசம்பாவித சூழல்களில் எப்படி துரிதமாக செயல்பட வேண்டும் என விமான ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இன் காரணமாகவே ஊழியர்களால் விரைந்து தீயை அணைக்க முடிந்தது. விமானத்தில் பயணம் செய்த பயனர்கள் மற்றும் பொருட்கள் என யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,” என இண்டிகோ தெரிவித்து இருக்கிறது.
விமானம் பறந்து கொண்டிருக்கும் போதே வெடித்துச் சிதறிய போன்..!
