• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அசால்ட்டாக ராஜ நாகத்தை பிடித்து டூயட் பாடிய நபர்..

Byகாயத்ரி

Jan 29, 2022

தாய்லாந்து நாட்டின் தெற்கு மாகாணமான கிராபில் உள்ள பனை தோட்டத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்து, கழிவுநீர் தொட்டியில் மறைந்து கொள்ள முயன்றதாக உள்ளூர்வாசிகள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஆவோ நாங் துணை மாவட்ட நிர்வாக அமைப்பின் தன்னார்வ தொண்டரான சுதீ நவ்ஹாத், பாம்பை பிடிக்க வந்தார். பின்னர் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் துரிதமாக செயல்பட்டு பாம்பை பிடித்தார்.

பிடிபட்ட அந்த ராட்சத நாகப்பாம்பு 4.5 மீட்டர் (கிட்டத்தட்ட 14 அடி) மற்றும் 10 கிலோகிராம்களுக்கு மேல் எடையுள்ளதாக கூறப்படுகிறது.நவ்ஹாத் முதலில் ஒரு திறந்த சாலையில் பாம்பை வெளியே இழுத்து, பின்னர் அதைப் பிடிக்கும் முயற்சியைத் தொடங்கினார்.

அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த ஒரு வீடியோ, பிடிக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ராஜ நாகம் எதிர்ப்பதைக் காட்டுகிறது. ஒரு கட்டத்தில், பாம்பு அதன் தாடையைத் திறந்து கொண்டு அவரை தக்க முன்னோக்கிச் சென்றது, ஆனால் நவ்ஹாத் அதன் வழியிலிருந்து தப்பித்தார்.அத்தனை பெரிய விஷப்பாம்பை அவை மிக எளிதாக பிடித்த அந்த காட்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.