தேசிய கடிதம் எழுதும் தினத்தை முன்னிட்டு, விவசாயி ஒருவர் 64 அடி நீளம் கொண்ட கடிதத்தை எழுதி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கின்றார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் விவசாயி சின்ன பெருமாள். தமிழ் மொழி ஆர்வலரான இவர், எழுதும் பழக்கம் மெல்ல, மெல்ல மறைந்து வருவதை தவிர்க்கும் விதமாக,, பல வருடங்களாக, இயற்கை சீற்றங்கள், புகழ் வாய்ந்த இந்திய தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகள், வரலாற்று தளங்கள் ஆகியவற்றை, பல வண்ணங்களில் கடிதங்களாக எழுதி, மாணவர்களிடத்திலும், இளைஞர்களிடத்திலும் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று தேசிய கடிதம் எழுதும் தினத்தை முன்னிட்டு, வ.உ.சிதம்பரனார் குறித்து 64 அடி நீளம் கொண்ட கடிதத்தை வண்ண எழுத்துக்களில் எழுதி, அதனை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் வழங்கினார்.

அந்தக் கடிதத்தில் வ.உ.சிதம்பரனாரின் பெருமைகள், குறித்தும், விடுதலைக்காக பட்ட துயரங்கள் குறித்தும் எழுதி உள்ளார்.

கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பொன்னம்பல அடிகளார் அதனைப் பார்வையிட்டு மகிழ்ந்தார்.