• Thu. Dec 12th, 2024

இன்று வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.., எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை..!

Byவிஷா

Nov 13, 2021

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், கன்னியாகுமரியில் மிக கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் தற்போது வரை வட கிழக்குப் பருவமழை இயல்பைவிட 56 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை தொடரும் என்றும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.


அதைத் தொடர்ந்து, சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.