

கர்நாடக தமிழக எல்லையில் கர்நாடக மாநில சரகத்திற்கு உட்பட்ட ஆனேக்கல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி கொன்ற மர்ம நபர்கள்.
தமிழகம் கர்நாடக எல்லை பகுதியில் கர்நாடக மாநில சரகத்திற்கு உட்பட பகுதியான ஆனேக்கல் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 8 மணி அளவில் காரில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் ராஜசேகர் ரெட்டி என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த சில மர்மநபர்கள் வழிமறித்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் வெட்டி கொலை செய்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு நகரில் பிடிஎம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜசேகர் ரெட்டி. இவர் புதன்கிழமை ஒரு வழக்கிற்காக அனேக்கல் நீதிமன்றத்துக்கு வந்து ஆஜராகி வாதாடி விட்டு இரவு 8 மணிக்கு தனது காரில் வீட்டிற்குத் சென்றுகொண்டிருந்த போது ஆனேக்கல் சந்தாபுரம் சாலையில் வெங்கடேஸ்வர தியேட்டர் அருகில் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நடு ரோட்டில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் வழக்கறிஞர் காரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய காரணத்தினால் வழக்கறிஞர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து ஆனேக்கல் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் இந்தக் கொலை சம்பவத்திற்கு காரணமான மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனேக்கல் பகுதியில் வழக்கறிஞர் ஒருவர் நடுரோட்டில் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பெங்களூரு நகரில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கர்நாடக அரசு இதுகுறித்து துரிதமாக நடவடிக்கை எடுத்து ஆனேக்கல் பகுதியில் நடக்கும் படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
